உனக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை மேற்கொள்ள இருக்கிறது. 2019 முதல் 202ஆம் ஆண்டு வரை நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நாளைய போட்டியுடன் முடிவுக்கு வர இருக்கிறது.
முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்காக நடத்தப்படும் சாம்பியன்ஷிப் தொடரில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அணியை கூறிவரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன் மற்றும் அலெஸ்டர் குக் ஆகிய இருவரும் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்று தற்பொழுது கூறியிருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணி மிகவும் ஒழுக்கமாக ஆக விளையாடி வரும் மணி ஆகும்
இது சம்பந்தமாக பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நியூசிலாந்து அணி வீரர்கள் எப்பொழுதும் ஒழுக்கமாக விளையாடக் கூடிய வீரர்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சமீப காலத்தில் அவர்களது ஆதிக்கம் மிக சிறப்பாக இருந்திருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறார்கள். தற்பொழுது அதே உற்சாகத்துடன் இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த மாதிரியான யுக்திகளை கையாள வேண்டும் என்பது நன்றாக தெரியும். இந்தியாவை வீழ்த்த அவர்கள் நிச்சயமாக நல்ல வியூகங்களை திட்டமிட்டு இருந்திருப்பார்கள். குறிப்பாக அவர்களது பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக இங்கிலாந்து மைதானங்களில் செயல்படுவார்கள், எனவே நாளைய போட்டியில் நிச்சயமாக இந்திய அணியை அவர்கள் வீழ்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அனைத்து ஏரியாக்களிலும் மிகச் சிறந்த அணியாக நியூசிலாந்து செயல்படும்
பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து ஏரியாக்களிலும் மிக சிறப்பாக நியூசிலாந்து அணி விளையாடி வருவதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர்களது பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக இன்னும் அதிக அளவில் மிகச் சிறப்பாக செயல் படுவார்கள் என்றும், இறுதிப் போட்டியில் இந்திய அணியை மிக எளிதாக நியூசிலாந்து அணியால் வீழ்த்தி விட முடியும் என்றும் அலெஸ்டர் குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் முன்னாள் வீரர்களும், அதேசமயம் வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பை கூறிவரும் நிலையில், நாளை நடக்க இருக்கும் இறுதி போட்டி முடிந்த பிறகுதான், எந்த அணி வெற்றி பெறும் என்பது தெரியும்.
நாளை நடக்க இருக்கும் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி 3:30 மணி அளவில் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது