இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் தனது ட்விட்டர் வலைதளத்தில் சமீபத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அந்த பதிவில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் மிக சிறப்பாக விளையாடும் என்றும் நிச்சயமாக இந்திய அணியை சர்வசாதாரணமாக வென்று விடும் என்றும் கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஹை கிளாஸ் அணி
நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியுள்ளது. அந்த டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி தற்போது ஹை கிளாஸ் அணியாக வலம் வருகிறது.
பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து ஏரியாக்களிலும் நியூசிலாந்து வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவர்களிடத்தில் எப்பொழுதும் இருக்காது. இங்கிலாந்து மைதானங்களில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்படுவார்கள். அதையே நாம் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் பார்த்தோம்.
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அதே வேகத்துடன் இந்திய அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருக்கின்றனர்.
இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வெற்றி பெறாத இந்திய அணி போராட வேண்டியிருக்கும்
ஆனால் மறுபக்கம் இந்திய அணி சமீப காலத்தில் எந்தஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை. அவர்கள் தற்பொழுது தங்களது அணிக்கு உள்ளேயே, .இரு அணிகளாக தங்களை பிரித்து பயிற்சி போட்டி மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இது அவர்களுக்கு பத்தாது என்றும், நிச்சயமாக இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடிக்க போராட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை சிறப்பாக வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது ஒரு பக்கம் இருந்தாலும், நியூசிலாந்து அணியை அதே கண்ணோட்டத்தோடு இந்திய அணி வீரர்கள் எதிர் கொள்ளக் கூடாது என்றும் அறிவுரை கூறியிருக்கிறார்.
இறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் மைக்கேல் வாகன் கூறி முடித்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் இறுதிப் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை ( ஜூன் 18 ) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டனில் இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்தியாவில் ஒளிபரப்பும் என்பதும் குறிப்பிடதக்கது.