முன்பெல்லாம் இந்திய அணியின் சிறந்த ஸ்பின் பவுலர்கள் என்றாலே குல்தீப் யாதவும் ஒவ்வொருவராக இருப்பார். ஆனால் கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து தொடர்ச்சியாக குல்தீப் யாதவ் சொதப்பி வருவதால் அனைவரும் இவரை மோசமான ஸ்பின் பவுலர் என்று அழைத்து வருகின்றனர்.
குறிப்பாகஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் விளையாடினார். முதல் ஒருநாள் போட்டியில் 9 ஓவர்களை வீசி 68 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்தார்.
இருந்தாலும் விராட் கோலி இவர் மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு கொடுத்தார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத குல்தீப் யாதவ் 2-வது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 84 ரன்கள் கொடுத்து மீண்டும் விக்கெட்டுகளை எடுக்காமல் ஏமாற்றினார். முதல் இரண்டு போட்டிகளில் சொப்பியதால் விராட்கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவரை வெளியேற்றினார்.
இதனால் குல்தீப் யாதவ் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் என அனைவராலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். இவரது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் இவர் ஒரு காலத்தில் சிறந்த ஸ்பின் பவுலராக இருந்தவர்.
குறிப்பாக தோனி இருக்கும்போது தனது ஸ்பின் பவுலிங்கில் அனைவரையும் மிரட்டினார். தோனி இருக்கும்போது குல்தீப் யாதவ் 4.87 எக்னாமி மற்றும் 22.53 சராசரியை பெற்றிருந்தார். ஆனால் தற்போது 6.22 எக்னாமி மற்றும் 61.71 சராசரியை பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பேசுகையில் “ தோனி இருந்தபோது குல்தீப் யாதவ் அவரிடம் ஆலோசனைகளை கேட்டு சிறப்பாக விளையாடினார். தற்போது தோனி இல்லாததால் அவருக்கு ஆலோசனை கொடுக்க யாருமில்லை. இதனால் தொடர்ச்சியாக தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
குல்தீப் யாதவ் தற்போதெல்லாம் ஒரே மாதிரி தான் பந்து வீசி வருகிறார். இதனை பேட்ஸ்மேன்கள் எளிதில் அறிந்து கொள்கிறார்கள். அவரது பந்து வீச்சில் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படவில்லை. இதன் பிறகு இவர் மீண்டு வருவது என்பது மிகவும் கஷ்டம். குல்தீப் யாதவ் இனி வரும் வாய்ப்புகளையாவுது சரியாக பயன்படுத்தி தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்” என்று மைக்கேல் பேசியிருக்கிறார்.