அடுத்த வருடம் பெங்களூர் அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? பயிற்சியாளர் அதிரடி அறிவிப்பு!

அடுத்த வருடம் பெங்களூர் அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? பயிற்சியாளர் அதிரடி அறிவிப்பு!

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த வருட ஐபிஎல் தொடர் வழக்கம்போல் சரியாக அமையவில்லை. துவக்க போட்டிகளில் ஒருமாதிரியாக நன்றாக ஆடிவிட்டு கடைசி நான்கு போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்தது. லீக் சுற்றில் 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி அதன் பின்னர் பிளே ஆப் சுற்றில் வெற்றி கனியை ருசிக்கவே இல்லை. 

ஐதராபாத் அணிக்கு எதிராக ஏற்கனவே தோல்வி அடைந்திருந்த பெங்களூரு அணி மீண்டும் பிளே ஆப் சுற்றில் எளிமினேட்டர் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. இந்த வருடமும் வழக்கம்போல் விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகிய இருவர் மட்டுமே 400 ரன்களுக்கு மேலாக அடித்த அந்த அணியை காப்பாற்றினர்.

 புதிதாக இளம் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 400 ரன்களுக்கு மேல் நடித்து இருந்தார் அவ்வளவுதான். அந்த அணியில் வேறு பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடவில்லை. பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஓரளவிற்கு நன்றாக வலிமை அடைந்து விட்டது. வாஷிங்டன் சுந்தர், நவதீப் சைனி, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இந்த வருடம் வித்தியாசமாக தென்படுகின்றனர்.

 ஆனால் அடுத்த வருடம் அணியில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் தலைமை இயக்குனர் மைக் ஹெஸன் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறுகையில்…

 இந்த வருட தோல்வி குறித்து ஏற்கனவே நாங்கள் கலாம் கலந்தாலோசித்து முடிவு செய்து விட்டோம். முதலில் இந்த ஆரவாரம் அடங்கட்டும். தோல்வியிலிருந்து வீரர்கள் ஏதாவது கற்றுக்கொள்ளட்டும். அடுத்த வருடம் பெரிய ஏலம் நடக்கிறதோ அல்லது சின்ன ஏலம் நடக்கிறதோ கண்டிப்பாக எங்களது அணியில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம்

 மிடில் ஆடர் எங்களது அணியில் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டு வீரர்களை வைத்து அதனை சரிசெய்ய முடியாது. வாஷிங்டன் சுந்தர் இந்த முறை நன்றாக இருந்தார். ஆனால் மிடில் ஆர்டரில் மாற்றம் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார் மைக்ஹெஸன்.   இப்படிப் பார்த்தால் வெளிநாட்டு வீரரான ஆரோன் பின்ச், மொயின் அலி, கிரிஸ் மோரிஸ் போன்றவர்கள் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.