44 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில், பந்துவீச்சில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஸ்டார்க்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் வேகப்பந்துவீச்சில் அசத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க், அனைத்து அணியின் பேட்ஸ்மேன்களையும் நடுங்க வைத்துள்ளார். இவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், இந்த ஓவரை விட்டுவிட்டு அடுத்து வருபவரை ஆடிக்கொள்ளலாம் என்ற அளவிற்கு இவரது ஆதிக்கம் இருந்துள்ளது.
Result: 9 wickets for left arm quicks of Australia with 5 wickets for behrendorff and 4 for starc
இந்த உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எக்கனாமி 5 க்கும் குறைவாகும். அதேபோல சராசரி 18.59 மட்டுமே. இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்ததாக, பங்களாதேஷ் அணியின் வீரர் முஸ்தபிஸுர் 20 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஆர்ச்சர் 19 விக்கெட்டுகளில் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.
ஸ்டார்க் வரலாற்று சாதனை
இந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்டார்க் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். இதற்க்கு முன்னர் 2007ஆம் ஆண்டு கிளென் மெக்ரத் வீழ்த்திய 26 விக்கெட்டுகளே அதிகபட்சமாக இருந்தது.
ஒரு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியல்
- மிச்சேல் ஸ்டார்க் – 2019 – 27 விக்கெட்டுகள
- கிளென் மெக்ராத் – 2007 – 26 விக்கெட்டுகள்
- சமிந்தா வாஸ் – 2003 – 23 விக்கெட்டுகள்
- ஷான் டெய்ட் – 2007 – 23 விக்கெட்டுகள்
- முத்தையா முரளிதரன் – 23 விக்கெட்டுகள்