இந்த ஆடுகளத்தில் விராட் கோலி சதமடிக்கவில்லை எனில் அவர் ஓய்வு பெறவேண்டும்: சீண்டும் மிட்செல் ஜான்சன்!!

மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட வேண்டும் என்று மிசெல் ஜான்சனை மீண்டும் மீண்டும் சீண்டியுள்ளார்.

மெல்போர்ன் பிட்ச் சில காலங்களாகவே மந்தமான பிட்சாக அமைக்கப்படுகிறது, இந்தப் பிட்சும் விதிவிலக்கல்ல, ஆனால் கடைசியில் ஒரு பந்து எகிறியதைப் பார்க்கும் போது நாளை மாறுமோ என்ற சந்தேகமும் உள்ளது. இதில் விராட் கோலி டாஸ் வென்று மிகப்பிரமாதமாக முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது பயனளித்தது.

முதல் நாள் ஆட்டத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஹனுமா விஹாரி தொடக்க வீரராக இறக்கப்பட்டார், இது அவருக்கு இழைக்கப்படும் அநியாயம் என்று வி.வி.எஸ். லஷ்மண் ஆட்டம் முடிந்த பிறகு கிரிக் இன்போ இணையதளத்தில் தெரிவித்தார். 

புஜாரா மீண்டும் ஒரு தூணாக நின்றார், சவுகரியமாக ஆடுகிறார், பேத்தல், பிதற்றல் இல்லை. ஆனால் நேர் நேர் தேமா பவுலர் மிட்செல் மார்ஷை கொஞ்சம் அடித்து ஆடியிருக்க வேண்டும். அதனால்தன நாள் முழுதும் ஆடியும் 89 ஓவர்களில் 215 ரன்கள்தான் வந்துள்ளது. மார்ஷ் 15 ஒவர்களில் 23 ரன்களையே கொடுக்கும் அளவுக்கு பெரிய பவுலிங் எல்லாம் செய்யவில்லை. அவரைக் கொஞ்சம் அடித்து ஆடியிருக்கலாம், சிலபல ஓவர்பிட்ச், ஆஃப் வாலி பந்துகளைக் கூட ரன் இல்லாமல் ஆக்கினர்.

ஆனால் கோலி மிக அனாயசமாக ஆடினாலும், லயனைக் கொஞ்சம் தடவினார், ஒரு ஆவலாதி எல்.பி.முறையீட்டில் ஆஸ்திரேலியா ஒரு டி.ஆர்.எஸ். வாய்ப்பை இழந்தது. அதாவது அவர்கள் விராட் கோலி விக்கெட் மீது எப்படி குறியாக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

 

கோலி ஒருமுறை கமின்ஸ் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆகத்தெரிந்தார். ஜோஷ் ஹேசல்வுட் பந்தில் கோலிக்கு எடுத்த எட்ஜ் ஒன்று ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது.

ஆனால் 2வது புதிய பந்து எடுத்த பிறகு ‘கிங்’ கோலி சாமானியக் கோலியாக்கப்பட்டார். 87வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க், கோலியைப் படுத்தி எடுத்தார். முதல் பந்தை பிளிக் செய்ய முயன்று பேடில் வாங்கினார். அது உயரமாகச் சென்றதால் தப்பினார் கோலி. அடுத்ததாக வைடு பந்தை துரத்தி எட்ஜ் செய்ய டிம் பெய்ன் டைவ் அடித்தும் பந்து அவர் கையில் சிக்கவில்லை, தப்பினார் விராட். அடுத்த பந்து பிட்ச் மாறிவிட்டதோ என்பதற்கு ஏற்ப நல்ல அளவில் விழுந்து எழும்பி விக்கெட் கீப்பரையும் தாண்டி ‘பை’ ஆனது. அடுத்த பந்தை இன்னும் வேகம் கூட்டினார் மிட்செல் ஸ்டார்க், ஸ்பீடா மீட்டரில் 150 கிமீ வேகம் காட்டிய அந்தப் பந்தை பிளிக் செய்ய முயன்று பீட்டன் ஆனார் கோலி, விக்கெட் கீப்பர் பெய்ன் கேட்சுக்கு முறையீடு எழுப்பினார். இப்படியாக இந்த ஓவரில் என்ன நடந்தது என்று கோலிக்கு ஒன்றும் புரியவில்லை, அவரை ஸ்டார்க் கடுமையாகக் குழப்பிவிட்டார். புதிய பந்து எடுத்த முதல் பந்தே விராட் கோலி பீட்டன் ஆனார்.

மொத்தம் 24 பந்துகள் ‘கிங்’ கோலி 47 ரன்களிலேயே நிற்கவைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் டிம் பெய்ன் விட்ட கடினமான வாய்ப்பு தவிர கேட்ச் என்று விடவில்லை, ஆனால் வாய்ப்புகள் பல பீல்டர் கைகளுக்குச் செல்லவில்லை. கடைசியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் பிட்ச் காலையிலிருந்து ஆடியதை விட வித்தியாசம் காட்டியது, நாளையும் இப்படிக் காட்டினால் வந்தவுடன் புஜாரா, கோலியை அவர்கள் வீழ்த்தி விட்டால் இந்திய அணி 300 ரன்களுக்குத் திண்டாடும், ஆனால் இப்போதைக்கு இந்திய அணியே வலுவான நிலையில் உள்ளது.

 

Sathish Kumar:

This website uses cookies.