ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஸ்; மாற்று வீரர் அறிவிப்பு !!

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஸ்; மாற்று வீரர் அறிவிப்பு

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த ஹைதராபாத் வீரர் மிட்செல் ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தின் மூலம் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்துள்ள ஹைதராபாத் அணி அடுத்ததாக வரும் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள நிலையில், காயம் காரணமாக ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அணியுடனான போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய மார்ஸ், பேட்டிங்கின் போது கடைசி கட்டத்தில் வேறு வழியின்றி களமிறங்கினார் இருந்தபோதிலும் அவரால் விலியுடன் விளையாட முடியாததால் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இந்தநிலையில், மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின்படி மிட்செல் மார்ஸிற்கு ஓய்வு தேவை என்பதால் அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மிட்செல் மார்ஸிற்கு பதிலாக விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் ஹைதராபாத் அணியில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஹோல்டர், மொத்தம் 116 டி.20 போட்டிகளில் விளையாடி அதில் 949 ரன்கள் குவித்துள்ளார். அதே போல் 91 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.