மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைத்தார்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்கிற பெருமையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெற்ருள்ளார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு மிதாலி ராஜ் 181 போட்டிகளில் 5959 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் 34 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார் மிதாலி ராஜ்.

மேலும், 41 ரன்களை எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 6,000 ரன்கள் எடுத்த முதல் வீராங்கனை என்கிற உலக சாதனையைப் படைத்தார் மிதாலி ராஜ்.

போட்டியின் விவரம் :

பெண்கள் உலக கோப்பை போட்டியில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது இதில் இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்தது இதில் இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்தது.

இந்திய மகளிர் அணியின் துடக்க அடக்காரரான பூனம் 136 பந்துகளில் 106 ரன்கள் அடித்து அசத்தினார். பிறகு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஆன மித்தாலி ராஜ் 69 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இந்திய மகளிர் அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்தது பிறகு பூனம் மற்றும் மித்தாலி ராஜ் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார்கள்.

பெரிதாக எதிர் பார்க்கப்பட்ட மந்தனா 10 பந்துகள் பிடித்து 3 ரன்கள் மட்டுமே அடித்தார். தற்போது ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆடி வருகிறார்கள்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.