விராட் கோலி, மிதாலி ராஜ் என மகளிர் மற்றும் ஆண்கள் கலந்துகொள்ளும் டி20 கிரிக்கெட்!

கண்காட்சி விளையாட்டு போட்டிகள் எப்போதும் நடத்தப்படுவது வழக்கம். தற்போது முதன்முறையாக வித்தியாசமான ஒரு கண்காட்சி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது .உலக கோப்பை தொடருக்கு பின்னர் இங்கிலாந்தில் ஜூலை மாதம் ஒரு புதுவிதமான கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ,ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்த ஒரு அணி உருவாக உள்ளது.

இந்த கண்காட்சி போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நடத்தப்பட உள்ளது. இதனை பற்றி ஒரு வீடியோவை ஹர்மன்பிரீத் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாங்கள் மீண்டு வருவோம் என நம்பிக்கையுள்ளதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

 

சென்னை, மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ். இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் தோல்வியை சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது.

இந்நிலையில் அணியின் நிலை குறித்து கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ”நடப்பு ஐபிஎல் தொடரில் எங்கள் அணி சிறந்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. இது வருத்தமான நிலை தான். ஆனால் நாங்கள் மீண்டு வருவோம் என நம்பிக்கையுள்ளது.

 

நாங்கள் மும்பைக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் நன்றாக விளையாடினோம். எங்களுக்கு சில தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. எங்களது அணி வீரர்களுடன் அமர்ந்துபேசி அணிக்கான சில தேவையை குறித்து ஆலோசிக்க வேண்டும். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கேட்ச்சுகளை தவறவிட்டோம். பல தவறுகளை செய்ததால் நேற்றைய போட்டியில் தோற்க நேர்ந்தது’’ என்று தெரிவித்துள்ளார்

ராயல் சேலஞ்சர்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.