முதல் போட்டியின் வெற்றியை இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடும் போது ஜோப்ரா ஆர்ச்சரிடம் மொயின் அலி கைக்கொடுத்தார். ஆனால் ஆர்ச்சர் அதை கண்டுகொள்ளாமல் ஆதில் ரஷித்திடம் கைக்கொடுத்து இருக்கிறார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர். இதையடுத்து மூன்றாவது போட்டி வருகின்ற 16ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி வெறும் 124 ரன்கள் குவித்ததால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 49 ரன்கள், ஆர்ச்சர் 3 விக்கெட்கள் எடுத்து சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்திய அணியில் ஸ்யேரஸ் ஐயர் 67 ரன்கள் குவித்து இந்திய அணியின் மானம் காத்தார்.
இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கட்டிபிடித்து கைகுலுக்கி தங்களது வெற்றி கொண்டாடி வந்தனர். அப்போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலி ஜோப்ரா ஆர்ச்சருக்கு கைக்கொடுத்தார். ஆனால் ஆர்ச்சர் அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் ஆதில் ரஷித்துக்கு கைக்கொடுத்துள்ளார். இதனால் மொயின் அலி ஏமாற்றமடைந்து வருத்ததிற்கு உள்ளாகியுள்ளார். அப்போது மொயின் அலியின் ரியாக்சனை பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கிறது. மொயின் ஏமாந்து மோன வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.