காசு முக்கியமே கிடையாது… சென்னை அணி தான் முக்கியம்; சென்னை ரசிகர்களின் மனதை வென்ற மொய்ன் அலி !!

எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்காமல் மொய்ன் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்புக்கொண்ட தகவலை சென்னை அணியின் காசி விஸ்வநாதனே வெளியிட்டுள்ளார்.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டிய காட்டாயத்தை சந்தித்தது.

ஒவ்வொரு அணியும் ஐபிஎல் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்குள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனைத்து அணிகளும் வெளியிட்டன.

இதில் ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜா, தோனி, மொய்ன் அலி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைத்து கொள்வதாக அறிவித்திருந்தது.

மொய்ன் அலி கடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடி சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்திருந்தாலும், மொய்ன் அலிக்கு பதிலாக டூபிளசியை தக்க வைத்திருக்கலாம் என சென்னை ரசிகர்கள் சிலர் வேதனைப்படாமல் இல்லை. ஆல் ரவுண்டர் என்பதால் டூபிளசிஸை விட மொய்ன் அலிக்கு முன்னுரிமை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொய்ன் அலியை 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து கொண்டது.

தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொய்ன் அலி தனக்கு 6 கோடி பத்தாது என முடிவு எடுத்து மெகா ஏலத்தில் கலந்திருந்தால் நிச்சயம் அவருக்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டிருக்கும் என கருதப்படும் நிலையில், மொய்ன் அலியோ எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்காமல் சென்னை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்ததை சென்னை அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வதநாதனே ஓபனாக வெளியிட்டுள்ளார்.

இது குறித்து காசி விஸ்வநாதன் பேசுகையில், “மொய்ன் அலியை நாங்கள் முதலில் தொடர்பு கொண்ட போதே அவர் சென்னை அணிக்காக விளையாட முழு சம்மதம் தெரிவித்துவிட்டார், மேலும் முதல் வீரராகவோ, கடைசி வீரராகவோ தான் தக்க வைக்கப்பட்டாலும் தனக்கு அதை பற்றி எந்த கவலையும் இல்லை, சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்பதையும் மொய்ன் அலி மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துவிட்டார். தனக்கு வேறு எந்த அணிக்காக விளையாடும் ஐடியா கிடையாது என்பதையும் மொய்ன் அலி தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக நாங்களும் அவருக்கு அதிக முன்னுரிமை கொடுத்து அவரை மூன்றாவது வீரராக தக்க வைத்தோம். மொய்ன் அலி சென்னை அணியில் மிக முக்கிய வீரராக திகழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளது சென்னை அணிக்கு தான் கூடுதல் பலம்” என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.