பாகிஸ்தானிற்கு குட் பை சொல்லிட்டு இங்கிலாந்தில் ஐக்கியமாகும் முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

பாகிஸ்தானிற்கு குட் பை சொல்லிட்டு இங்கிலாந்தில் ஐக்கியமாகும் முக்கிய வீரர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரிட்டன் குடியுரிமை பெற்ற நர்கிஸ் மாலிக் என்பவர்தான் சமீபத்தில் டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாக். இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஆமிரின் மனைவி ஆவார்.

இந்நிலையில் தன் மனைவியுடன் இங்கிலாந்திலேயே வீடு கட்டி அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆக மொகமட் ஆமிர் முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“மனைவியின் வீசா மூலம் யுகேயில் நிரந்தரக் குடியுரிமை பெற்று பிற வசதிகளையும் பெற்று விடலாம். இதனால்தான் இங்கிலாந்தில் வீடு வாங்கவும் அவர் முடிவெடுத்துள்ளார்” என்று பாக். கிரிக்கெட் வட்டாரங்கள் பிடிஐ  செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இவர் 27 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததை முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் ஷோயப் அக்தர் ஆகியோர் விமர்சனம் செய்திருந்தனர்.

அதாவது 27-28 வயதில்தான் கரியரில் உச்சம் பெற முடியும், அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்தது, அதிலிருந்து ஓய்வு அறிவிக்கிறார் என்றால் அவரது கிரிக்கெட் நலன்கள் என்னவென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற தொனியில் வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.