கெட்ட கெட்ட வார்த்தைல திட்டாதீங்க ப்ளீஸ்; கெஞ்சி கேட்கும் பாகிஸ்தான் வீரர் !!

கெட்ட கெட்ட வார்த்தைல திட்டாதீங்க ப்ளீஸ்; கெஞ்சி கேட்கும் பாகிஸ்தான் வீரர்

தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் பாகிஸ்தான் வீரர்களை தரக்குறைவாக பேச வேண்டாம் என முகமது அமீர் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. 7-வது முறையாக உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வெல்ல முடியாமல் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததற்குப் பின் அந்த அணி வீரர்களை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். மெத்தனமாக விளையாடினார்கள் என்று முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முதல் நாளில் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் ஹோட்டலில் சென்று துரித உணவுகள் சாப்பிடும் காட்சி குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானது. இவ்வாறு சாப்பிட்டால் எவ்வாறு விளையாட முடியும் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து காட்டமாக கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷோயிப் மாலிக் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “வீரர்கள் சார்பில் நான் ஊடகங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யாதீர்கள். யாரையும் மோசமான முறையில் விவாதத்துக்கு அழைக்கக் கூடாது. அது சரியானதும் அல்ல. நாங்கள் ஹோட்டலில் சாப்பிடும் காட்சி குறித்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து யாரும் யோசிக்கவில்லை.

அந்தக் காட்சிகள் அனைத்தும் 13-ம் தேதி எடுக்கப்பட்டவை. நாங்கள் போட்டிக்கு முந்தைய நாளில் எங்கும் செல்வில்லை. பாகிஸ்தான் ஊடகங்கள் எப்போதுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படப் போகின்றன?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். ரசிகர்கள் பேசுவதைக் கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக விளக்கம் அளிப்பதும் வேதனையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல் பாகிஸ்தான் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான முகமது அமீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ள பதிவில், வீரர்களை தரம் தாழ்த்தி விமர்சிக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் அணி நிச்சயம் தோல்வியில் இருந்து மீண்டும் வரும் அதற்கு ரசிகர்களாகிய உங்களின் ஆதரவு தேவை” என்றும் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.