சாஹல், மற்றும் குல்தீப் யாதவை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர் !!

சாஹல், மற்றும் குல்தீப் யாதவை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் பந்துவீச்சு திறன் அபாரமாக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான முகமது ஹபீஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்க்கில் அபாரமாக கைப்பற்றி வரலாறு  படைத்ததற்கு குல்தீப் யாதவ்வும், சாஹலும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர். இருவரும் சேர்த்து மொத்தம் 33 விக்கெட்டுகளை அள்ளினர்.

இதனையடுத்து பாராட்டு மழையில் நனைத்து வரும் இந்த இரண்டு இளம் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது ஹபீஸ், குல்தீப் யாதவ் மற்றும் சாஹலின் பந்துவீச்சு திறனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இது  குறித்து முகமது ஹபீஸ் கூறியதாவது “சுழல் பந்துவீச்சாளர்கள் எப்போதும் சிறப்பாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணியில் முக்கியமானவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் அனில் கும்ளே, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன், பாகிஸ்தான் முஷ்டாக் அகமது ஆகியோர் பல போட்டிகளை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இப்போது சேஹல், குல்தீப் இருவரும் அருமையாகப் பந்துவீசுகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு இவர்கள் பங்கு முக்கியமானது. ஆசியாவுக்கு வெளியே போட்டியை வெல்வது முக்கியம். அதில் இவர்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் சதாப் கானும் சிறப்பாகப் பந்துவீசுகிறார். 19 வயதுதான அவருக்குச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் சர்ப்ஃராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.