இந்திய வீரர்கள் ரொம்ப மோசமானவர்கள்; சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர் !!

இந்திய வீரர்கள் ரொம்ப மோசமானவர்கள்; சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்

2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி பெறும் நோக்கில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது ஹபீஸ் சர்ச்சையாக பேசியுள்ளார்.

2019 உலக கோப்பையை பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்து அணியே வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கேற்றார் போல் இந்திய அணியும் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடனான பழியை தீர்க்கவே இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்ததாக பலரும் பேசினார்.

உலகக்கோப்பை நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டே நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்பொழுது அதே சர்ச்சையை பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது ஹபீஸ் மீண்டும் கிளப்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த குறிப்பிட்ட இந்தியா – இங்கிலாந்து உலக கோப்பை போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது ஹஃபீஸ், எந்த கிரிக்கெட் ரசிகரிடம் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள்.. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற ஸ்போர்ட் ஸ்பிரிட்டுடன் அந்த போட்டியில் விளையாடவில்லை என்றுதான் சொல்வார்கள். போட்டியில் வெற்றி பெறுவதோ, ஒரு அணி தொடரை விட்டு வெளியேறுவதோ எல்லாம் அடுத்த விஷயம். நாங்கள் நன்றாகத்தான் ஆடினோம். ஆனால் ஒருசில தவறுகளால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினோம்.

ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகராக, இந்தியா – இங்கிலாந்து இடையேயான அந்த போட்டியை பார்த்தால், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியிடம் நான் பார்க்கவில்லை.

அந்த போட்டியை மிக மோசமானதாக உணர்கிறேன். இந்தியா இங்கிலாந்திடம் தோற்றதால் தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் நாங்களும் சில தவறுகளை செய்ததால் எங்களால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. ஆனால் அதேவேளையில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் ஆடவில்லை என்று முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.