பந்து வீச சொன்னால் ‘மாங்கா’ அடிக்கிறார் இவர், ஐ.சி.சி ரெப்ரிக்கல் புலம்பல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 37 வயதான முகமது ஹபீஸ், சுழற்பந்து வீசக்கூடியவர். இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியின் போது அவர் 8 ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கள நடுவர்கள், ஐ.சி.சி. போட்டி நடுவரிடம் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் அவர் 3-வது முறையாக இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அடுத்த 14 நாட்களில் ஹபீஸ் தனது பந்து வீச்சை பரிசோதனைக்குட்படுத்தியாக வேண்டும். அதுவரை அவர் தொடர்ந்து பவுலிங் செய்யலாம்.

இதற்காக அவர் இன்னு 14 நாட்களுக்கும் சென்னையில் உள்ள ராமச்சந்திரா பல்கலைகழகத்திற்கு வருகை புரிந்து அவரது பந்து வீச்சு தரத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்கு முன் 2014ல் முதல் முறையாக இவரது பந்து வீச்சு கேள்விக்குள்ளாக்கப்பட்டு ‘கொத்து’ வீசுகிறார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த முறை சென்னை வந்து தனது பந்து வீச்சை சரி செய்து விட்டு சென்றார். அடுத்த வருடமே இதே பிரச்சனை அவரை துரத்தியது. மீண்டும் அவர் 2105ஆம் ஆண்டு கொத்து வீசுகிறார் என ரிப்போர்ட் செய்ய, அடுத்த 12 மாதங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச தடை செய்யப்பட்டார்.

பின்னர் பிரிஸ்பேனில் உள்ள நேசனல் கிரிக்கெட் செண்டரில் சென்று பந்து வீச்சை சரி செய்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச துவங்கிய நிலையில் தற்போது ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளார்.

பந்தை கொத்துகிறார் என்றால், ஒருவர் பந்து வீசும் போது அவரது வீசும் முழங்கை 15° க்கு மிகாமல் கையை நேராக வைத்து வீச வேண்டும். அவ்வாறு 15°யைத் தாண்டுமாயின் அவர் ரிப்போர்ட் செய்யப்படுவார்.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று 3-வது ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் 208 ரன்னில் சுருண்டது. கேப்டன் தரங்கா அதிகபட்சமாக 61 ரன் எடுத்தார். ஹசன் அலி 10 ஓவரில் 34 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் இமான்-உல்-ஹக் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அவர் 125 பந்தில் 100 ரன் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இவர் முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக்கின் உறவினர் ஆவார்.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. 4-வது ஆட்டம் சார்ஜாவில் நாளை நடக்கிறது.

Editor:

This website uses cookies.