டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது ஹபீஸ் !!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் முகமது ஹபீஸ் !!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது ஹபீஸ், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 89 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் 45 ரன்னும், கிரான்ட்ஹோம் 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆனார்கள். விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னுடனும், வில்லியம் சோமர்விலி 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது ஹபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

.நியூசிலாந்து அணியுடன் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு பிறகு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக முகமது ஹபீஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹபீஸ் பேசியதாவது,’இப்போது நடக்கும் போட்டி முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறேன். அடுத்த வருடம் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாகிஸ்தானுக்காக 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அணியை வழி நடத்தும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருந்தது.

இதனால் பெருமைகொள்கிறேன். எனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி. அடுத்து வரும் தொடர்களில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு அறிமுகமமான முகமது ஹபீஸ்.. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 3638 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் சராசரி 38.29 ஆகும். இதில் 10 சதங்களும், 12 அரை சதங்களும் அடங்கும். ஆல் ரவுண்டரான முகமது ஹபீஸ் 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.-

Mohamed:

This website uses cookies.