தோனியே இவரை பார்த்து தான் விக்கெட் கீப்பிங் கற்று கொண்டார்; முகமது கைஃப் சொல்கிறார் !!

தோனியே இவரை பார்த்து தான் விக்கெட் கீப்பிங் கற்று கொண்டார்; முகமது கைஃப் சொல்கிறார்

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட்டிம் இருந்து தான் விக்கெட் கீப்பிங்கில் கில்லியான தோனியே சில நுணுக்கங்களை கற்று கொண்டதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் தல தோனி ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் ஆவார் அவரின் விக்கெட் கீப்பிங் ஸ்டைல் பார்ப்பவரின் மனதை கவரும் வண்ணத்தில் உள்ளது, அவரின் மிக வேகமான மற்றும் துல்லியமான விக்கெட் கீப்பிங் அணிக்கு மேலும் மேலும் பணத்தை சேர்க்கும். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் இவரும் ஒருவர். ஆனால் அவர் இந்தியா அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பொழுது அவர் டெக்னிக்கலாக சிறந்த விக்கெட் கீப்பராக செயல்படவில்லை பின் தன் கடும் முயற்சியினால் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

தோனியின் பேட்டிங்கை குறை சொல்பவர்கள் கூட தோனியின் விக்கெட் கீப்பிங் முறையை குறை சொல்லவே முடியாது, அந்த அளவிற்கு விக்கெட் கீப்பிங்கில் கில்லியாக திகழ்ந்து வந்த தோனி, முன்னாள் விக்கெட் கீப்பரான ராகுல் டிராவிட்டிடம் இருந்து தான் சில முக்கிய நுணுக்கங்களை கற்று கொண்டதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் டைரீஸ் என்ற நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான முகமது கைப் , அஜித் அகர்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் க கலந்துகொண்டனர் . இவர்கள் விக்கெட் கீப்பிங் பற்றி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர் அதில் எம்எஸ் தோனி ராகுல் ட்ராவிட் விடமிருந்து சில விக்கெட் கீப்பிங் உத்திகளை கற்றுக் கொண்டார் என முகமது கைஃப் தெரிவித்தார்.

டிராவிட் இந்திய அணிக்காக 72 ODI இல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு 86 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அதில் 76 கேட்ச்களும், 14 ஸ்டம்பிங்களும் அடங்கும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் ஆவார் ஆனால் அவர் விளையாண்ட ஆரம்ப காலகட்டத்தில் அவர் விக்கெட் கீப்பிங் கில் சிறந்து விளங்க டிராவிட் ஒரு முக்கிய காரணமாகும்.

ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பரானது எப்படி..?

ராகுல் டிராவிட் தன் 16 வயதில் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் பின்பே அதில் பெரிதும் நாட்டம் இல்லாததால் விக்கெட் கீப்பர் பொசிசனில் இருந்து விலகினார் பின் முழு நேர பேட்ஸ்மேன் ஆகவே பயிற்சி எடுத்தார் . அப்போது கேப்டனாக திகழ்ந்த சவுரவ் கங்குலியின் வேண்டுகோளுக்கிணங்க டிராவிட் மீண்டும் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அதனால் கூடுதலாக மற்றுமொரு பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடிந்தது.


ராகுல் டிராட்டிற்கு நன்றி தெரிவித்த முகமது கைஃப்:

2002இல் வெற்றி பெற்ற நாட்வெஸ்ட் டிராபி பற்றி கூறுகையில், எனக்கு அதில் வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் டிராவிட் விக்கெட் கீப்பிங் செய்ய ஒத்துக் கொண்டதே ஆகும் அதனால்தான் எனக்கு இந்திய அணியின் விளையாடும் 11 வீரர்களில் ஒருவராக விளையாட முடிந்தது, மற்றும் ஏழாவது பேட்ஸ்மேனாக களம் இறங்க முடிந்தது என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.