சின்ன சின்ன பசங்கள நம்பி… இவரை போன்ற நல்ல வீரர்களை இழந்துடாதீங்க; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !!

சின்ன சின்ன பசங்கள நம்பி… இவரை போன்ற நல்ல வீரர்களை இழந்துடாதீங்க; எச்சரிக்கும் முன்னாள் வீரர்

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புவனேஷ்வர் குமார் புறக்கணிப்படுவது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டி.20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியும், அந்த அணியின் கேப்டன் உள்பட நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய நிலையில், அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணியோ, நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு தொடரில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுத்து வருவது ஏன்..? எந்த அணியிலும் இல்லாத ஒரு வழக்கம் இந்திய அணியில் மட்டும் ஏன்..? எதிர்கால திட்டங்கள் என்ன..? என முன்னாள் இந்திய வீரர்கள் பலரே இந்திய அணியின் இந்த புதிய வழக்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், தற்போதைய இந்திய அணியில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், புதிய வீரர்களை தேடுவதற்காக சீனியர் வீரர்களை புறக்கணிப்பது சரியான நடைமுறை அல்ல என தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “இந்திய அணி அடுத்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடருக்கு முன் வெறும் 25 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. எனவே இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது, உலகக்கோப்பை தொடருக்கான வலுவான அணியை கட்டமைப்பதில் தான் இந்திய அணி முழு கவனத்தையும் செலுட்த வேண்டும். இல்லையெனில் டைமண்ட்-ஐ தேடி தங்கத்தை தொலைத்த கதையாகிவிடும். முக்கியமான பிரச்சினை பந்து வீச்சில் உள்ளது. நீங்கள் ஷர்துல் தாகூரை பார்த்தீர்கள் என்றால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடவில்லை. முகமது சிராஜ் இந்தியாவிற்கு திரும்பியதை பார்த்து இருப்பீர்கள். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.