உலகின் முதல் வீரர் என்ற பெருமை… மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரனாகிய முகமது ரிஸ்வான் !!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான முகமது ரிஸ்வான் சர்வதேச டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிக்கோலஸ் பூரன் 64 ரன்களும், பார்டன் கிங் 43 ரன்களும், சம்ராஹ் ப்ரூக்ஸ் 49 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 207 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் வழக்கம் போல் மிக சிறப்பான துவக்க கொடுத்தனர். முகமது ரிஸ்வான் 45 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், பாபர் அசாம் 53 பந்துகளில் 79 ரன்களும் எடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் குவித்த முகமது ரிஸ்வான் இதன் மூலம் சர்வதேச டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த போட்டியின் மூலம் நடப்பு கிரிக்கெட் ஆண்டில் தனது 2000வது டி.20 ரன்னை பதிவு செய்த முகமது ரிஸ்வான், இதன் மூலம் ஒரே ஆண்டில் (டி.20 போட்டிகளில்) 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

டி20 உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த ரிஸ்வானின் பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொடர்ந்து சிறப்பான விளையாடி வரும் அவர், ஒரே வருடத்தில் 2 ஆயிரம் ரன்களை தாண்டிய முதல் சர்வதேச வீரர் என்ற அசுர சாதனையை பதிவு செய்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.