யோயோ போட்டியில் தேர்ச்சிபெறாத வீரர்களுக்கு மீண்டும் போட்டி நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சிபெற்ற சமி மீண்டும் இந்தியாவின் டெஸ்ட் அணியில் இணைகிறார்.
உடற்தகுதி பயிற்சி இந்திய வீரசர்கள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றால் தான் இந்திய அணியில் இடம்பெறமுடியும் எனவும் கூறப்பட்டது.
இதன்படி, இந்திய வீரர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்ப பட்டனர். இதில் முகமது சமி அணியில் இடம்பெற்றிருந்தாலும் பரிசோதனையில் தோற்றதால் நீக்கப்பட்டார்.
இவர் மட்டுமல்லாமல் ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோரும் நீக்கப்பட்டனர். இதனால், முன்னதாக அறிவிக்கப்படாமல் திடீரென டெஸ்ட் என கூறியதால் தான் தேர்ச்சி பெறவில்லை எனவும் வீரர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ நிர்வாகம் மீண்டும் பரிசோதனையை வைக்க முடிவு செய்தது. முதலில் ராயுடு பரிசோதனை மேற்கொண்டு தேர்ச்சி பெற்றார். இதனால், ஒருநாள் போட்டிக்கான அணியில் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த பரிசோதனையில் முகமது சமி தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.