ஐந்து விக்கெட்டுகளை அசால்டாக கைப்பற்றிய முகமது ஷமி… வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய முகமது ஷமிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்தியாவிற்கு வந்துள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெருன் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அந்த அணியின் துவக்க வீரரான மிட்செல் மார்ஸை (4) முதல் ஓவரிலேயே வெளியேற்றி அசத்திய முகமது ஷமி, ஸ்டீவ் ஸ்மித் (41), ஸ்டோய்னிஸ் (29), மேத்யூ ஷார்ட் (2) மற்றும் சியன் அபாட் (2) என மொத்தம் 5 ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். முகமது ஷமி பந்துவீச்சில் ஏற்படுத்திய திருப்புமுனையின் மூலம் ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய அசத்திய முகமது ஷமிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் முகமது ஷமியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதில் சில;