இந்திய அணிக்காக கபில் தேவ் செஞ்ச வேலைய இப்ப இவர் செஞ்சிட்டு இருக்காரு… சீனிய வீரரை பாராட்டி பேசிய சுனில் கவாஸ்கர்  !!

இந்திய அணிக்காக கபில் தேவ் செஞ்ச வேலைய இப்ப இவர் செஞ்சிட்டு இருக்காரு… சீனிய வீரரை பாராட்டி பேசிய சுனில் கவாஸ்கர்

பந்துவீச்சில் மிரட்டி வரும் முகமது ஷமியை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் பாராட்டி பேசியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இதுவரை விளையாடியுள்ள போட்டியில் மற்ற அணிகளுடனான வெற்றியை விட நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றியே தரமானது. இந்திய அணியை போன்றே தோல்வியையே சந்திக்காமல் வெற்றி பாதையில் கெத்தாக பயணித்து கொண்டிருந்த நியூசிலாந்து அணியை, இந்திய அணி கெத்தாக வீழ்த்திய இந்திய அணி, இந்திய மண்ணில் தங்களை வீழ்த்து சாதரண விசயம் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்தது.

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு சீனியர் வீரரான முகமது ஷமி தான் முக்கிய காரணம். நியூசிலாந்து அணியுடனான போட்டிக்கு முந்தைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த முகமது ஷமி, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு நியூசிலாந்து அணியின் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியையும் இலகுவாக்கினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்து வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். வெறும் 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், முகமது ஷமியை கபில் தேவுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “முகமது ஷமியின் துல்லியமான பந்துவீச்சு வியக்க வைக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட முகமது ஷமி, தனக்கு கிடைத்த நேரத்தை தனது பந்துவீச்சில் இருக்கும் குறைகளை சரி செய்து கொண்டு, பந்துவீச்சில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டிருப்பார். முகமது ஷமி அதிகமான நேரங்களை ஜிம்மில் செலவிடும் நபரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரது பிட்னெஸ் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு பிட்னெஸ் மிக அவசியம். அவரால் எவ்வளவு நேரம் தொய்வில்லாமல் ஓட முடிகிறது என்பது மிக முக்கியம். இதற்காக வலைபயிற்சியில் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும், முன்பு கபில் தேவ் செய்ததை போன்று தற்போது முகமது ஷமி செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.