இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் இந்தியாவில் ரஞ்சிக் கோப்பை தொடரின் அடுத்த சீசனில் ஆட தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் இங்கிலாந்தின் கவுன்டி அணியான நார்த்தாம்ப்டன்ஷேர் அணிக்காக ஆடி வந்தார். 2001ஆம் ஆண்டு 101/8 என எடுத்து அசத்தினார். அதன்பிறகும், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்ததால், இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து அணியில் ஓரிரு வருடங்கள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரா இடம்பெற்று வந்தார். அதன்பிறகு உடல்நிலை குறைவு மற்றும் பந்து வீச்சில் தரம் குறைவு ஆகியன காரணமாக அணியில் இருந்து அவ்வபோது நீக்கப்பட்டு வந்தார்.
2013 ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் அணியில் இவருக்கு இடமளிக்கப்படவில்லை. அதன்பிறகு கவுண்டி போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த இவர் தற்போது வரை இங்கிலாந்து அணியில் இடம்பெற முடியவில்லை.
இந்நிலையில் தனது முழு திறமையை வெளிப்படுத்த ரஞ்சிக் கோப்பை சரியாக இருக்கும் என முடிவு செய்து இந்தியாவின் ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்தசீசனில் ஆடுவதற்கு பிசிசிஐ அனுமதி கேட்டிருந்தார். அநேகமாக, அடுத்த ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் இவர் நிச்சயம் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களைவிட புதுச்சேரியில் வெளிநாட்டு வீரர்கள் ஆடுவதற்கான சட்டதிட்டங்கள் இருக்கின்றன.
மேலும் மற்ற மாநிலங்களை விட அதிகமான வெளிநாட்டு வீரர்களை அந்த அணியில்தான் எடுத்துவருகின்றனர். ஆதலால், இந்த சட்டத்தின் மூலம் புதுச்சேரி ரஞ்சி கோப்பை அணியில் மான்டி பனேசர் ஆடுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
கர்நாடகாவை சேர்ந்த வினய் குமார் தற்போது அங்கிருந்து ஓய்வு பெற்று, புதுச்சேரி ரஞ்சி கோப்பை அணியின் ஆலோசகராக பொறுப்பெற்றுள்ளார்.