பும்ராஹ் இல்லை; இங்கிலாந்து அணியை இந்த வீரர் தான் வச்சு செய்ய போகிறார்; முன்னாள் வீரர் உறுதி !!


இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்ட்டி பனசர் கூறியதாவது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் மிக சிறப்பாக செயலாற்றுகிறார் ,இவருடைய பந்துவீச்சு இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.


இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.பலம் வாய்ந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ள இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்ட்டி பனசர் தெரிவித்ததாவது,இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுகிறார் இவரது யுக்தியும் மேலும் இவரது துல்லியமான பந்துவீச்சும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு மிகுந்த சவாலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.


இதில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஒரு சாதகமான விஷயம் என்றால் அது ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயம் தான் அந்த காயத்தின் காரணமாக இவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கவில்லை இதனால் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு நெருக்கடி குறையும் வாய்ப்பு உள்ளது. இவருக்கு பதிலாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் பட்டேல் களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளார்.

மெலும் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதால் இந்திய அணி வீரர்கள் மிகவும் உற்சாகத்துடனும் மன பலத்துடன் இருப்பார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.இதனை கவனத்தில் கொண்டு இங்கிலாந்து அணி செயல்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.