வருகிற 2021 காண டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது இதனால் எந்த வீரர்கள் தங்களது அணிக்கு சரியாக இருப்பார்கள் என்று ஒவ்வொரு அணியும் மிகத் தீவிரமான திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் 2021 கானா ஐபிஎல் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று உள்ளது இந்தத் தொடர் வருகிற உலககோப்பை டி 20 தொடரில் இடம்பெறுவதற்கு வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்திய அணியின் பேட்டிங் லைனர் மிகவும் வலுவாக உள்ளது அதேபோன்று வேகப் பந்து வீச்சிலும் இந்திய அணி மிரட்டி வருகிறது ஆனால் சுழற்பந்து வீச்சில் எந்த ஒரு வீரரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. தோனியின் ஓய்விற்குப் பின் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக திகழ்ந்த குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சஹால் ஆகிய இருவரும் மிக மோசமான வெளிப்பாட்டை கொடுக்கின்றனர் இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு, இந்த ஐபிஎல் தொடர் தான் ஒரு முக்கிய பலப்பரிட்சையாக அமையும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களும் தங்களின் சிறப்பான திறமையை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேர்வு குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பெனசார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரின் தலையெழுத்து இந்த ஐபிஎல் தொடர் தான் இதில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவர்களது 2021 உலகக்கோப்பை கனவை மறக்க வேண்டியது தான் என்று கூறினார்.
மேலும் இந்திய அணி மிக சிறப்பாக உள்ளது ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களின் தேர்வுதான் வருத்தமளிக்கிறது,ஒருவேளை நான் விராட் கோலியாக இருந்தால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்து இருப்பேன் இவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மேலும் சிறந்த ஆல்ரவுண்டர் என்று தெரிவித்தார்.
நிச்சயம் இந்த உலக கோப்பையில் அஸ்வின் மிக சிறப்பாக செயல்படுவார் எனவே அஸ்வின் மற்றும் ஜடேஜாவை விராட் கோலி நிச்சயம் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் ஒழுங்கா விளையாட வில்லை என்று ஒரு வீரரை ஒதுக்கிவிட முடியாது,ஒரு வீரர் நிலைத்திருப்பதற்கு வேறு வழிகளும் உண்டு என்று தெரிவித்த அவர் இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயம் அணியின் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ஹர்பஜன் சிங்கின் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாட காத்திருக்கிறார் அவரை நாம் குறைத்து மதிப்பிட முடியாது அவர் ஒரு திறமையான வீரர் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை ஹர்பஜன் சிங்கும் இந்த உலகக் கோப்பையில் பங்கு பெறலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.