ஒல்லி ராபின்சன் சில வருடங்களுக்கு முன்னர் சில தவறான பதிவுகளை தனது ட்விட்டர் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் அது மீண்டும் தோண்டப்பட்டு சமூகவலைதளங்களில் அதிகமாக பரவியது. அது ஆசிய ரசிகர்களை குறிப்பாக இந்திய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கோபப்படுத்தியது. விஷயம் பெரிதாகி போக ராபின்சன் தாமாக முன்வந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இங்கிலாந்து நிர்வாகம் இதை மன்னிக்கவில்லை. அவரை தற்பொழுது சஸ்பெண்ட் செய்துள்ளது. கவுண்டி கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியவர் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மிக அற்புதமாக டெஸ்ட் கேரியர் ஆரம்பிக்கும் வேளையில், முன்பு செய்த ஒரு தவறு தற்போது அவரை மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாக்கி உள்ளது. அதன் காரணமாக அவர் மீண்டும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.
புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள ஜோஸ் பட்லர், மோர்கன், மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்
இன்னிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சில வருடங்களுக்கு முன்னர் ஸ்டூவர்ட் பிராடை தவறாக சில வார்த்தைகள் பேசி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் மீண்டும் தோண்டப்பட்டு சமூக வளைதளத்தில் பரவி வரும் அந்த பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தன்னுடைய விளக்கத்தைக் கூறிய ஜேம்ஸ் ஆண்டர்சன் அது முன்னர் நடந்த விஷயம், நான் தற்பொழுது முழுவதுமாக மாறிவிட்டேன்.
பழைய விஷயங்களை இவ்வாறு எடுத்துக் கொண்டு வர வேண்டாம். என்றோ செய்த தவறை நான் சரி என்று கூறவில்லை ஆனால் தற்போது அவற்றையெல்லாம் கடந்து, ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனவே அப்போது நடந்த விஷயங்களை இப்போது பெரிதுபடுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல நியூசிலாந்தைச் சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் மற்றும் மோர்கன் ட்விட்டர் வலைதளத்தில் பேசிய ஒரு சில பதிவுகள் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் பற்றி ஜோஸ் பட்டிலர் பதிவிட்ட சில பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவை அனைத்தும் தற்போது மிக பெரிய பேசுபொருாக மாறியுள்ளது.
நடவடக்கை எடுக்க தயாராக இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்
இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் இங்கிலாந்து நிர்வாகம் எடுத்துக் கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபின்சன் போல இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சில கிரிக்கெட் வல்லுனர்கள் இவ்வாறு மீண்டும் வருங்காலத்தில் நடக்காமல் இருக்க ஒரு சில தண்டனைகள் வழங்கி வருவது தான் சரி என்றும் கூறிவருகின்றனர்.