நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய உலகக் கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, ‘நோ பால்’ ஆகியிருக்க வேண்டியது. அதனை நடுவர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலகக் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில், நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
துரதிர்ஷ்டவசமாக 49வது ஓவரின் 3வது பந்தில் 2 ரன்னுக்கு ஓட ஆசைப்பட்ட தோனி, ரன் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
27 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிசுற்றை எட்டியதால் இங்கிலாந்து வீரர்கள் பரவசத்தில் உள்ளனர்.
இந்தியா – நியூஸிலாந்து அணி கள் இடையிலான அரை இறுதி ஆட்டத்தை நாங்கள் பயிற்சிக்கு செல்லும் வரை பார்த்தேன். கிரிக் கெட்டின் சிறந்த ஆட்டம் அது. நியூஸிலாந்து வீரர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் நியூஸிலாந்து அணி இந்தத் தொடர் முழுவதுமே வீழ்த்துவதற்கு கடினமான அணி யாக திகழ்ந்து வருகிறது என்றே நினைக்கிறேன். லீக் சுற்றிலும் சிறப்பாக விளையாடினார்கள்.
நியூசிலாந்து இந்த தொடர் முழுவதும் அனேகமாக தோற்கடிக்க கடினமான ஒரு அணியாக இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக ஆடினார்கள். இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. ஆனால் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொட ரில் 1992-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக தற்போதுதான் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்தி ரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியிருந்தது இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.