அதிக டிஸ்மிசல்ஸ் செய்த இந்திய விக்கெட் கீப்பர் : சகா சாதனை

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 286, இந்தியா 209 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி 208 ரன்கள் என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா மொத்தம் 10 பேரை ஆட்டமிழக்க செய்தார். 10 பேரையும் கேட்ச் மூலம் சாஹா ஆட்டமிழக்க செய்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும், தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். தோனி கடந்த 2014-ம் ஆண்டு 9 வீரர்களை ஆட்டமிழக்க செய்ததே இந்திய அணியில் இதுவரை சாதனையாக இருந்தது.

2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அறிமுகமான சாஹா இதுவரை 85 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். அதில் 75 கேட்ச், 10 ஸ்டம்பிங்.

அதிக டிஸ்மிசல்ஸ் செய்த இந்திய விக்கெட் கீப்பர் : சகா சாதனை

இந்த டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகள் பிடித்ததன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக டிஸ்மிசல்ஸ் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படத்தார் சகா. இதற்கு முன்னர் முன்னாள் இந்திய கேப்டன் தோனி 9 கேட்சுகள் பிடித்ததே சாதனையாக இருந்தது.

அதிக டிஸ்மிசல்ஸ் செய்த இந்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியல் :

1.சகா – 10, கேப் டவுன், 2018
2.தோனி – 9, மெல்போர்ன், 2014
3.மோங்கியா – 8, டர்பன், 1996
4.மோங்கியா – 8, கொல்கத்தா, 1999
5.தோனி – 8, பெர்த், 2008
6.தோனி – 8, தாக்கா, 2010
7.தோனி – 8, மும்பை, 2011

Editor:

This website uses cookies.