கிரிக்கெட்டில் டி20 போட்டியை அறிமுக படுத்திய பிறகு, பல வீரர்களுக்கு பொறுமையாக விளையாடுவது என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது. டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைவாக உள்ளதால், அடித்து விளையாடி ரன் சேர்க்க நினைப்பார்கள். இதனால், டி20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேனுக்கான போட்டி என்பார்கள். அதுவும் சரி தான் ! ஓவர்கள் குறைவாக உள்ளதால் ரன் சேர்க்க பவுண்டரி சிக்ஸர்களாக விளாசுவார்கள். இதன் மூலம், ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் வீரர்கள். இந்நிலையில் ஒரே டி20 இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்திருக்கும் வீரர்களை பார்ப்போம்:
கிறிஸ் கெய்ல் – 15
2015ஆம் ஆண்டில் சோமர்செட் அணிக்காக டி20 போட்டியில் விளையாடிய கிறிஸ் கெய்ல் 62 பந்துகளில் 151 ரன் அடித்து அசத்தினார். அந்த போட்டியின் போது அவர் 10 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர்கள் அடித்து விளாசினார்.
தசுன் ஷானகா – 16
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலோம்போ மைதானத்தில் சினேலேஸ் அணிக்காக விளையாடிய அவர் சாரசென்ஸ் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 123 ரன் அடித்தார். அந்த இன்னிங்சின் போது 16 சிக்ஸர் அடித்த ஷானகா இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறார்.
கிரகாம் நேப்பியர் – 16
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரகாம் நேப்பியர், 2008ஆம் ஆண்டு சசெக்ஸ் அணிக்கு எதிராக 16 சிக்ஸர் விளாசினார். ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையை 2013ஆம் ஆண்டு வரை இவர் தக்கவைத்து கொண்டிருந்தார். அந்த போட்டியின் போது இவர் 58 பந்தில் 152* அடித்தார்.
கிறிஸ் கெய்ல் – 17
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 2013ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் புனே அணிக்கு எதிராக எதிர்பார்க்காத 175 ரன் அடித்து அசத்தினார். அந்த போட்டியின் போது அவர் 17 சிக்ஸர்களை விளாசினார்.
கிறிஸ் கெய்ல் – 18
2017ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் இறுதி போட்டியில் ராங்ப்பூர் அணிக்காக ருத்ரதாண்டவம் ஆடினார் கெய்ல். அந்த போட்டியின் போது 18 சிக்ஸர்கள் விலகிய கெய்ல் 69 பந்துகளில் 146* ரன் அடித்தார்.