முதல் 50 போட்டிகளுக்குப் பிறகு அதிக விக்கெட் மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்தார் ரசித் கான்!!

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி வென்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தி யா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.

துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு சூப்பர்-4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முகமது ஆமிர், காயம் காரணமாக ஷதாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக, முகமது நவாஸ், ஹாரிஸ் சோகைல் மற்றும் அறிமுக வீரராக ஷாகீன் அப்ரிதி சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக ஆடிய அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்தாலும் ஹஸ்மலுல்லா ஷாகிதியும் கேப்டன் அஸ்கர் ஆப்கானும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர்.

இவர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடினார்கள். பாகிஸ்தானின் ஃபீல்டிங்கும் மோசமாக இருந்தது.கேப்டன் அஸ்கார் ஆப்கன் 67 ரன்களும் ஹஸ்மலுல்லா ஷாகிதி ஆட்டமிழக்காமல் 97 ரன்களும் எடுத்தனர்.

பெரிய அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர்கள் யாரும் சதம் அடித்ததில்லை. அதற்கு நேற்று வாய்ப்பிருந்தது. அதற்காக, கடைசி பந் தில் ஷாகிதிக்கு 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்தப் பந்தை உஸ்மான் கான் சாதுர்யமாக வீசி அவரது செஞ்சுரி கனவைத் தகர்த்தார். பாகி ஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், ஷாகின் அப்ரிதி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பரபரப்பு நீடித்தது. ஆனால் அனு பவ வீரர் சோயிப் மாலிக் சிறப்பாக ஆடி பரபரப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 80 ரன்களும் பாபர் அஸாம் 66 ரன்களும் சோயிப் மாலிக் 51 ரன்களும் எடுத்தனர். சோயிப் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆப்கான் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் முஜீப்புர் ரஹ்மான் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

50 போட்டிகளுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள்:

முகமது சமி மற்றும் ப்ரெட் லீ: 91 விக்கெட்டுகள்

இந்தியாவின் முகமது ஷமி  மற்றும் ஆஸ்திரேலியாவின் ப்ரெட் லீ 50 ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் 91 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.