என்ன செய்தாலும் மீம் ஆக மாற்றுகிறார்கள்: விராட் கோலி வேதனை!

குப்பையை தெருவில் வீசாமல் குப்பை தொட்டியை பயன்படுத்துங்கள் என குப்பை போட வந்த நபரிடம் அனுஷ்கா சர்மா சீறி உள்ளார்.
விராட் கோலியும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்வா இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது அருகில் வந்த காரில் இருந்த நபர் ஒருவர் குப்பையை எடுத்து தெருவில் வீச முயன்றார். அப்போது  இதனை கவனித்த அனுஷ்கா சர்மா உடனடியாக தன் காரின் கண்ணாடியை இறக்கி அந்த நபரிடம் எதற்காக குப்பையை கீழே போடுறீங்க…?  குப்பை தொட்டியை பயன்படுத்துங்கள் என கூறி தனது கார் கண்ணாடியை ஏற்றி விடுகிறார்.
இதனை அனுஷ்கா சர்மா கணவர் விராட் கோலி வீடியோவாக எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஒருவகையில் மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது

தொடர்ந்து, இதற்கு விளக்கம் அளித்துள்ள அர்ஹான் சிங்(குப்பை வீசியவர்) எனது கார் கண்ணாடி வழியாக வெளியேறிய குப்பையை விட அனுஷ்கா சர்மாவின் வசைமொழியும், அதனை வீடியோவாக எடுத்த விராட் கோலி செயலும் படுகுப்பையாக உள்ளது  என அவர் கூறியுள்ளார்.

சாலைகளில் குப்பை வீசுபவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

Indian cricketer Virat Kohli (L) and his wife Bollywood actress Anushka Sharma pose during their wedding reception in Mumbai on December 26, 2017.

சாலையில் மக்கள் குப்பை வீசுவதைக் கண்டேன். அவர்களை நன்குக் கண்டித்தேன். விலை உயர்ந்த காரில் சென்றாலும் மூளை வேலை செய்வதில்லை. இவர்கள் நம் நாட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா? இதுபோல நடப்பதைக் கண்டால் நீங்களும் அவர்களைக் கண்டியுங்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்றார். இதுகுறித்த விடியோவையும் பகிர்ந்தார்.

விராட் கோலியின் இந்த ட்வீட்டைக் கிண்டலடித்தும் விமரிசனம் செய்தும் சிலர் ட்வீட் செய்தார்கள். இதையடுத்து உடனடியாக அடுத்த ட்வீட்டில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார் கோலி. அதில் அவர் கூறியதாவது:

தைரியமாக இதுபோல செய்யத் துணிவு இல்லாதவர்கள், கிண்டலாகப் பார்க்கிறார்கள். இன்றைக்கு எல்லாமே மீம் ஆக மாற்றப்படுகிறது. அவமானம் என்று வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

Editor:

This website uses cookies.