எப்போதும் கீழ் வரிசையில் இறங்கும் நான், எப்படி ஓபனிங் செய்தேன் – இந்திய அணியின் தோல்விக்கு காரணமான ஆஸி., வீரர் பேட்டி!

என்னை துவக்க வீரராக களமிறக்கியது இவர் தான் என்று ஆட்டநாயகன் விருது பெற்ற கேமரூன் கிரீன் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி முகாலி மைதானத்தில் நடத்தப்பட்டது. மைதானம் அதிக ஸ்கோர் அடிப்பதற்கு சாதகமாக இருப்பதால் டாஸ் வென்ற ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் களம் கண்டனர். துரதிஷ்டவசமாக ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து வந்த விராட் கோலியும் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. கே எல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். சூரியகுமார் யாதவ் 46 ரன்களுக்கும் கேஎல் ராகுல் 55 ரன்களுக்கும் ஆட்டம் இழக்க, உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா பந்தை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விலாசினார். பினிஷிங் ரோலில் விளையாடிய இவர் 30 பந்துகளில் 71 ரன்கள் அடிக்க, இந்திய அணி 200 ரன்களை கடந்து, 20 அவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் அடித்தது.

சற்று கடினமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரில் இருந்து பவுண்டரிகளை விளாச துவங்கினார் கேப்டன் ஆரோன் பின்ச். இவர் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு உள்ளே வந்த ஸ்மித் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பொதுவாக கீழ் வரிசையில் களமிறங்கும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், இப்போட்டியில் முதல்முறையாக துவக்க வீரராக களம் இறங்கினார். ஆஸ்திரேலிய அணியின் இந்த முடிவு அவர்களுக்கு மிக சாதகமாக அமைந்தது. கிரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் விலாசி ஆட்டமிழந்தார். ஸ்மித் 35 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.  உமேஷ் யாதவ் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்த, இந்திய அணி சற்று முன்னேற்றம் கண்டது.

ஆனாலும் கீழ் வரிசையில் களமிறங்கிய டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். இறுதிவரை ஆட்ட விளக்காமல் இருந்தது. 45 ரன்கள் அடித்திருந்தார். 30 பந்துகளில் 61 ரன்கள் அடித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  அப்போது அவர் அளித்த பேட்டியில்,

“என்னை துவக்க வீரராக களம் இறக்கியது கேப்டன் ஆரோன் பின்ச். நான் வழக்கமாக இறங்குவதை விட மிகவும் கீழ் வரிசையில் இறங்கி வந்தேன். இது குறித்து பின்ச் இடம் பேசினேன்.  அவர், உன்னை நான் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன். அதுவரை நீ பொறுமையாக இரு என்று என்னை அமைதிப்படுத்தினார். இதை புரிந்து கொண்ட நான் பொறுமையுடன் இருந்தேன். அனுபவம் மிக்க அவர் எந்த வீரரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மிகச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார். முதல் டி20 போட்டியில் நானே எதிர்பார்க்கவில்லை ல், ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக நான் துவக்க வீரராக களமிறங்கி விட்டேன். ஹர்திக் பாண்டியா விளையாடிய விதத்தை நான் கவனித்தேன். அதிலிருந்து ஐடியாவை எடுத்துக்கொண்டு எனது ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.” என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.