சமீபத்தில் முடிந்த U19 கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அணுகுல் ராய் அற்புதமாக பந்து வீசி 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்த உலகக்கோப்பையில் அவர் 1/36, 5/14, 4/20, 1/14, 1/11 மற்றும் 2/32 என்ற கணக்கில் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுத்தார். இந்தஉலககோப்பையின் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் அணுகுல் ராய்.
சில சமயத்தில் பேட்டிங்கும் விளையாட கூடிய அணுகுல் ராய், இந்திய அணியுடன் நியூஸிலாந்துக்கு செல்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ராய் ப்ரித்வி ஷா தலைமையிலான இந்திய அணியுடன் சேர்ந்து நியூஸிலாந்துக்கு சென்றார்.
உலகக்கோப்பை முடிந்த பிறகு இந்தியாவிற்கு வந்த ராய் அவரது செயல்பாடு, குறிக்கோள் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பற்றியும் அவர் பேசினார்.
கேள்வி: பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்பரே எப்படி உதவி செய்தார்?
பதில்: பயிற்சியின் போது அவர் பல உதவி செய்திருக்கிறார். எப்படி வீசணும் என்ன வீசணும், எங்கிருந்து வீசணும் மற்றும் கையை எப்படி வைத்து வீச வேண்டும் என பல உதவி செய்திருக்கிறார். அது மிகவும் முக்கியம்.
கேள்வி: உங்களுடைய அடுத்த குறிக்கோள் ?
பதில்: தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த குறிக்கோள்.
கேள்வி: வெற்றி பெற்றதும் தோனியை பார்க்க முடிந்ததா?
பதில்: உலகக்கோப்பையை வென்ற பிறகு அவரை பார்க்கவோ, அவரிடம் பேசவோ இல்லை. ஆனால் என்னை அவருக்கு தெரியும். நாங்கள் எப்பொழுது சந்தித்தாலும், நீ சிறப்பாக பந்து வீசுகிறாய், பந்துவீசும் போது முழு உடலையும் உபயோக படுத்தினால், ஷார்ட் பிட்ச் பந்துகள் வராது என கூறினார். அதன் பிறகு நான் ஷார்ட் பிட்ச் பந்துகள் போடுவதை குறைத்துவிட்டேன். எனக்கு இப்பொழுது நம்பிக்கையாக இருக்கிறது.