2 வாரத்திற்கு முன்னர் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, தனி விமானத்தில் ராஞ்சி சென்ற பாண்டிய சகோதரர்கள்! புகைப்படத்தை வெளியிட்ட தோனியின் மனைவி சாக்ஷி!

2 வாரத்திற்கு முன்னர் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க, தனி விமானத்தில் ராஞ்சி சென்ற பாண்டிய சகோதரர்கள்! புகைப்படத்தை வெளியிட்ட தோனியின் மனைவி சாக்ஷி!

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜூலை 7ஆம் தேதி தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதன் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

குறிப்பாக சமூக வலைதளங்களில் தோனியை கொண்டாடித் தீர்த்தனர் தேசிய அளவில் பல  விஷயங்கள் தோனியை பற்றி ட்ரெண்ட் ஆனது ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான வகையில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும். வேளையில் பாண்டியா சகோதரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவரது மனைவி பங்குரி சர்மா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய விஷயத்தை செய்துள்ளனர் .

அதாவது தங்களது சொந்த ஊரான பரோடாவில் இருந்து ராஞ்சிக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்து தோனியின் வீட்டிற்கு சென்று அவரை வாழ்த்தி வந்துள்ளனர். தோனியின் பிறந்த நாளன்று காலையில் பரோடா விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் எடுத்து ரூபாய் 60 லட்சம் ரூபாய் செலவு செய்து மூன்று மணி நேரத்தில் ராஞ்சி சென்று சேர்ந்துள்ளனர்.

அங்கிருந்து தோனியின் பண்ணை வீட்டிற்கு கார் மூலமாக சென்றனர். அங்கு சென்று தோனியுடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு அந்த நாள் இரவே மீண்டும் தாங்கள் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் தங்களது ஊரான பரோடாவிற்கு சென்று சேர்ந்துள்ளனர் .அவர்கள் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை நேற்று டோணியின் மனைவி சாக்ஷி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

 

 

 

Mohamed:

This website uses cookies.