தோனி மாதிரி நினச்சு அவர டெஸ்ட் தொடர் கேப்டன் ஆக்குங்கள்; இந்திய அணிக்கு அறிவுரை வழங்கிய யுவராஜ் சிங் !!

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி லிமிடெட் இவர் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக மட்டும் செயல்பட்டு வந்தார்,ஆனால் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால், அதற்குப் பொறுப்பேற்கும் விதமாக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகிக் கொண்டார்.

இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் அனுபவ வீரர் ரோஹித் சர்மாவை மூன்று விதமான தொடருக்கும் கேப்டன் ஆகியது.

ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு இளம் வீரர் ஒருவரை கேப்டனாக்க வேண்டும், அப்பொழுதுதான் இந்திய அணியை நீண்டகாலம் அவர் வழிநடத்திச் செல்லலாம், மேலும் இதன் மூலம் இந்திய அணி ஒரு நிலையான அணியாக திகழும் என்று தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், தோனியை ஒப்பிட்டு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதில்,“இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ஆக்கினார்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தோனி மிக சிறந்த முறையில் அணியை வழிநடத்தி வெற்றிகர கேப்டனாக பயணித்தார், அதேபோன்று இந்திய அணியை வழிநடத்த ஒரு இளம் வீரரை கேப்டனாக வேண்டும் அப்போதுதான் அவருக்கான சரியான நேரமும் வாய்ப்பு கிடைக்கும், அதிசயம் என்பது ஆறு மாதங்களிலோ அல்லது ஒரு வருடங்களிலோ நடந்துவிடாது, இதன் காரணமாக இளம் வீரர் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அந்த பொறுப்பை கொடுக்க வேண்டும், ரிஷப் பண்ட் தற்பொழுது அனுபவ வீரர் போல் செயல்படுகிறார். ஆனால் அந்த வயதில் நான் அந்தளவிற்கு அனுபவம் பெறவில்லை, இந்திய அணி நிர்வாகம் எப்படி அவரை நினைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வழிநடத்தக் கூடிய தகுதி திறமை ரிஷப் பண்டிடம் உள்ளது என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்

 

Mohamed:

This website uses cookies.