2021 கான ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது இந்த போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று அனைத்து அணிகளும் தங்களின் வேறு தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சென்னை அணி மிக மோசமாக செயல்பட்டது,இதனால் நிச்சயம் இந்த ஆண்டு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்க காத்திருக்கும் சென்னை அணி தனக்கு தேவைப்படும் வீரர்களை கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற ஏலத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி மற்றும் இந்திய அணியின் இளம் வீரரான கிருஷ்ணப்ப கௌதம் ஆகியவர்களை ஏலத்தில் எடுத்துக்கொண்டது.
இந்நிலையில் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர நாயகன் ஷேன் வாட்சன் ஐபிஎல் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் இதனால் சென்னை அணிக்கு ஷேன் வாட்சன் இடத்தை நிரப்புவதற்கு ஒரு வீரர் தேவைப்பட்டது இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரராக இருந்த ராபின் உத்தப்பாவை டிரேடிங் மூலம் சென்னை அணி தேர்ந்தெடுத்துக் கொண்டது.
ராபின் உத்தப்பா 2007 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒன்றாக விளையாடியுள்ளார் மேலும் ராபின் உத்தப்பா வின் திறமை மற்றும் அவருடைய பலமறிந்து சென்னை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கிரிகெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் தேர்வானது குறித்து ராபின் உத்தப்பா தெரிவித்ததாவது,தோனி என்னை அழைத்து உன்னை சென்னை அணிக்காக நான் மட்டும் தேர்வு செய்யவில்லை அணி நிர்வாகமும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது உன்னை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக என்னிடம் கேட்கப்பட்ட பொழுது நான் முழு நிர்வாகத்திடமும் கேட்டு முடிவு எடுங்கள் என்று தெரிவித்து விட்டேன். ஏனென்றால் அவர்கள் தோனி இருப்பதால்தான் ராபின் உத்தப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நினைத்துவிடக் கூடாது என்று தெரிவித்தார்.
தோனியின் இந்த வார்த்தையை கேட்டு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன், அதில் அவர் எனக்கு தெரியப்படுத்தியதாவது, உன்னுடைய தனித்திறமை மற்றும் தன்னம்பிக்கையால் மட்டும்தான் நீ சென்னை அணிக்கு தேர்வாகியுள்ளாய், இதில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று தோனி குறிப்பிட்டதாக ராபின் உத்தப்பா தெரிவித்தார்.