தோனியை கலாய்க்கப் பார்த்த ரசிகர் : வாயடைக்க வைத்த தோனி.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டயும் தாண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் சர்ச்சைக் கருத்துகளுக்கும் அதனையும் தாண்டிய வார்த்தைச் சண்டைகளுக்கும் இங்கு பஞ்சமே இல்லை எனலாம். மேலும் கிரிக்கெட் விளையாட்டை இங்கு தொடர்பவர்களும் அதிகம். கிட்ட தட்ட 90 சதவீத இந்திய மக்கள் கிரிக்கெட்டை நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ தொடர்ந்து வருகின்றனர். மேலும் கிரிக்கெட் விளையாட தெரிந்தால் போதும் தன்னை கிரிகெட் எக்ஸ்பெர்ட் ஆக நினைத்துக் கொள்பவர்களும் பாதிக்கு பாதி இருக்கின்றனர்.

அவர்களை போன்றவர்கள் ஞாயிற்றுக் கிழமை கூட வெளியில் வந்து மைதானத்தில் கிரிகெட்டிற்க்காக நேரம் செலவிடுவார்களா என்று கேட்ட்டால் திரு திருவென தான் முழிப்பார்கள். அவர்களின் வேலை யாதனெனில் தொலைகாட்சி அல்லது சமூக வலைதளங்கள் மூலம் கருத்து சொல்வது என்ற பெர்யரில் மற்றவர்களை நேரடியாவே தொல்லை செய்து வருகின்றனர். இது போன்ற அத்து மீரல்கள் அவ்வப்போது நடந்து வந்தாலும் அவர்கலும் அவ்வப்போது தகுந்த பதிலடிகளை வாங்கியும் வருகின்றனர்.

அதே போன்ற ஒரு அரை குறை 2012ல் சமூக வலை தளமாக ட்விட்டரில் முன்னாள் இந்திய கேப்டன் மஹேந்த்ர சிங் தோனியிடம் அத்து மீற , அவருக்கு தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளார் தோனி.

அந்த உரையாடல் கீழே :

 

தோனி ஒரு பதிவை இட்டு வித்யாசம் கண்டறியுங்கள் என கூற, அதனை

ட்விட்டர் பக்கத்தில் அத்து மீறிய அவர் தோனியிடம் இது போன்ற செயல்களை விட்டு விட்டு உங்கள் பேட்டிங்ன் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள் எனக் கூற, தோனியுன் கவனத்திற்குச் சென்ற அந்த ட்வீட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக, ” கண்டிப்பா சார், வேற எதாவது டிப்ஸ் இருந்தா செல்லுங்கள் சார்” என முறனாக பதில் அளித்த தோனி அவருடைய வாயையும் அடைத்தார்.

அந்த உரையாடல் கீழே :

இது போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை எளிதாக தொடர்பு கொள்ள இயலும் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்னவெல்லாம் கட்டளை இடுதல் மிகவும் தவறான ஒன்றாகும் என்பதை அந்த ஒரு சாரார் உணர்தல் வேண்டும்.

அவர்களுக்கு என ஒரு தனி குடும்பமும் அவர்களுக்கு என ஒரு தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என்பதை நாம் கண்டிப்பா உணர்ந்து கொள்ள வேண்டும்.

Editor:

This website uses cookies.