இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தியது பி.சி.சி.ஐ.,; புதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு !!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தியது பி.சி.சி.ஐ.,; புதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ., இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மூலம் பி.சி.சி.ஐ.,க்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்காமல் இருந்தது.

வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி, டோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன்  சமீபத்தில் ஆலோசனை செய்தனர்.

அதன்படி வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ., இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதில் ஏ கிரேட் பட்டியலில் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் தவான் வரிசையில் பும்ராஹ் மற்றும் புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளனர். இவர்களுக்கு 7 கோடி ரூபாய் சம்பளமாகும்.

இதே போல் 5 கோடி சம்பளம் பெறும் வீரர்களுக்கான பட்டியலில் தோனி, அஸ்வின், ஜடேஜா, விரதிமான் சாஹா, முரளி விஜய், புஜாரா, ரஹானே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பி கிரேட் பட்டியலில் உமேஷ் யாதவ், கேல் ராகுல், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாகும்.

“சி” கிரேட் பட்டியலில் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே,   அக்‌ஷர் பட்டேல், கருண் நாயர், பார்தீவ் பட்டேல்  மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்திய ரசிகர்களு அதிர்ச்சியளிக்கு விசயம் என்னவென்றால், டெஸ்ட் அணிகளில் தொடர்ந்து விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த பட்டியலில் இடம்பெறாதது தான். இது குறித்த காரணம் எதுவும் தெரியவில்லை.

Mohamed:

This website uses cookies.