சச்சினின் மிகப்பெரிய ரசிகர் சுதிர் கவுதமுக்கு தோனி செய்தி மரியாதை – நெகிழ்ச்சி பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமிற்கு எம்எஸ் டோனி தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் பாரம்பரிய ரசிகரான சுதிர் கவுதமிற்கு விருந்து கொடுத்து அசத்திய டோனி
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் சர்வதேச போட்டியில் 100 சதங்கள் அடித்து அசைக்க முடியாத சாதனையை பதிவு செய்துள்ளார். இவரது தீவிர ரசிகர் சுதிர் கவுதம். இந்திய அணி விளையாடும் மைதானத்திற்குச் சென்று உடற்முழுவதும் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு சச்சின் பெயரை உடலில் எழுதிக் கொண்டு அவரை உற்சாகமூட்டுவார்.

சச்சின் தெண்டுல்கர் ஓய்வு பெற்றதும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வமற்ற பாரம்பரிய ரசிகராக மாறிவிட்டார். வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் கூட இந்திய அணியை உற்சாக மூட்ட கிளம்பி விடுவார். தற்போது ஐபிஎல் தொடர் முடிவடைந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Gautam was in for a treat in 1 June, Friday as he was invited by former India skipper Mahendra Singh Dhoni at his farm house for lunch. A visibly jubilant Gautam shared pictures with captain cool’s family on Twitter.

சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்பட்டபோதும், தற்போது விக்கெட் கீப்பராக செயல்படுகிற போதிலும் சுதிர் கவுதம் உற்சாகமூட்டி வருகிறார்.

இந்திய அணிக்கு உற்சாகமூட்டி வரும் சுதிர் கவுதமிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க டோனி முடிவு செய்தார். அதன்படி தனது பண்ணை வீட்டிற்கு சுதிர் கவுதரை அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது டோனியின் மனைவி சாக்சியும் உடன் இருந்தார்.

The camera, the audience and the Indian Cricket Team loves Gautam for his unflinching love for the game and they have shown it time and time again.

இதுகுறித்து சுதிர் கவுதம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கூல் கேப்டன் எம்எஸ் டோனி் மற்றும் அவரது குடும்பத்துடன் மதிய உணவு அருந்தியது ஸ்பெஷல் நாளாக அமைந்தது. இந்த நேரத்தை செலவிட்டதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நன்றி, எம்எஸ் டோனி, சாக்சி’’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Editor:

This website uses cookies.