வீடியோ : சதம் அடித்த ராகுலின் கொண்டாட்டத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய தல தோனி!! வீடியோ கீழே உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இங்கிலாந்து இதற்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுடனான தொடர்களில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றதால், இந்தியாவுடனான போட்டி பரபரப்புடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ் குமாரும், உமேஷ் யாதவும் பந்து வீசினார். ஆனால், இந்த இருவரின் பந்துகளையும் நாலாபுறமும் சிதரடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 6 ஓவர்களில் 50 ரன்களை குவித்தனர். இந்நிலையில் ஜேசன் ராய் 30 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீசில் க்ளீன் போல்டாகி அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் பட்லர் தடாலடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினார்.
ஆனால் மறுமுனையில் அடுத்தடுத்து களமிறங்கிய ஹேல்ஸ், ரூட், மார்கன், பேர்ஸ்டவ் ஆகியோரை தனது அபாரமான சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழக்கச் செய்தார் “சைனா மேன்” சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இறுதியாக ஜோஸ் பட்லரும் 46 பந்துகளில் 69 ரன்கள் குவித்து குல்தீப்பின் சுழலில் ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிகர் தவான் 4 ரன்களில் அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல் அதிரடியை காட்டினார். இங்கிலாந்து பந்து வீச்சை விரட்டி விரட்டி அடித்தார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா 32 ரன்களில் அவுட்டானார்.
பின்பு, லோகஷ் ராகுலுடன் கோலி இணைந்தார். ஆனால், லோகேஷ் ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். கோலி நிதானமாக ஆடி 22 ரன்களில் களத்தில் இருந்தார். இறுதியில் இந்தியா 18.2 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இப்போது இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஜூலை 6 ஆம் தேதி கார்டிஃப் நகரில் நடைபெறுகிறது.