தோனிக்கு இனி பி.சி.சி.ஐ ‘ஏ’ கிரேடு கான்ட்ராக்ட் இல்லை
இந்திய அணியின் லிமிடட் ஓவர் போட்டிகளில் மற்றும்வி விளையாடி வரும் வீரர்களுக்கு இனிமேல் ஏ கிரேட் ஒப்பந்தம் வழங்கக்கூடாது என ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த பி.சி.சி.ஐ அதிகாரிகள் கிரிக்கெட் வாரியத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் விராட் கோலி அணி வீர்ரகள் சார்பாக வீரகளுக்கு சம்பளம் உயர்வு குறித்து பி.சி.சி. ஐ இடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் மூலம் வீரர்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நீதிபதி வினோத் ராய் தலைமையில் ஒரு குழு அமையாக்கப்பட்டது. அந்த குழு தற்போது சம்பளம் குறித்த ஏய்க்கை சமர்ப்பித்துள்ளது. இதில் ஏ கிரேடு ஒப்பந்தம் குறித்த ஒரு புதிய விதி கூறப்பட்டுள்ளது.
அதாவது ஏ கிரேட் ஒப்பந்தம் என்பது மூன்று (டெஸ்ட்+ஒருநாள்+டி20) விதமான போட்டிகளிலும் விளையாடுந் வீரகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால்.தோனி தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் இதன் காரணமாக தோனிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஏ கிரேட் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.