WWE போட்டியில் கால் பதிக்கிறாரா தல தோனி; குழப்பத்தில் ரசிகர்கள் !!

WWE போட்டியில் கால் பதிக்கிறாரா தல தோனி; குழப்பத்தில் ரசிகர்கள் 

WWE ராயல் ரம்பிள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களா? என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் குழப்பமடைய வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. மெல்போர்னில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி 87 ரன்கள் எடுத்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்குப்பின் அணிக்குத் திரும்பிய அவர், 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

தோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது.

ஐசிசி-யின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ போட்டியில் விளையாடும் யுனிவெர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் வழக்கறிஞர் ஹேமன் ராயல்டி கேட்டடிருந்தார்.

அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை தோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது. அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஐசிசி, “உங்களுக்கும், ப்ரோக் லெஸ்னருக்கு உலகக் கோப்பை தொடரைப் பார்ப்பதற்கான டிக்கெட் வழங்கிறோம்” எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜன.28) நடைபெறும் WWE ராயல் ரம்பிள் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களான என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது.

இதற்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள், பதிலளித்து வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.