குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் சிஎஸ்கேவுக்கு 200ஆவது சிக்ஸரை பதிவு செய்திருக்கிறார் தோனி. இதன் மூலம் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் சிறப்பாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று குஜராத் அணி முதலில் பந்து வீசியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
துவக்கவீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக செயல்பட்டு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசி அரைசதம் கடந்தார். ருத்துராஜ் 50 பந்துகளில் 92 ரன்கள் அடித்து சரியான முறைப்படி ஆட்டம் இழந்தார். இதில் ஒன்பது சிக்ஸர்கள் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
மொயின் அலி 23 ரன்கள், அம்பத்தி ராயுடு 12 ரன்கள், சிவம் தூபே 19 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். கடைசியாக உள்ளே வந்த தோனி 20வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரிகள் அடித்து ஏழு பந்துகளில் 14 ரன்களுடன் ஆட்டத்தை முடித்தார்.
தோனி, இந்த இன்னிங்சில் ஒரு சிக்சர் அடித்ததன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக 200ஆவது சிக்சரை பதிவு செய்து புதிய சாதனையையும் படைத்தார். ஒரு அணிக்கு எதிராக 200 மற்றும் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் தோனி.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்:
1. கிரிஸ் கெயில் – ஆர்சிபி -239 சிக்ஸர்கள்
2. ஏபி டி வில்லியர்ஸ் – ஆர்சிபி – 238 சிக்ஸர்கள்
3. கீரன் பொல்லார்ட் – மும்பை இந்தியன்ஸ் – 228 சிக்ஸர்கள்
4. விராட் கோலி – ஆர்சிபி – 218 சிக்ஸர்கள்
5. மகேந்திர சிங் தோனி – சிஎஸ்கே – 200 சிக்ஸர்கள்.
ஐபிஎல்-இல் மொத்தம் 229 சிக்ஸர்களை மகேந்திர சிங் தோனி அடித்திருக்கிறார். அதில் 29 சிக்ஸர்கள் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ஸ் அணைக்காக அடிக்கப்பட்டது ஆகும்.