தோனிக்கு இந்திய அணியில் கடைசியாக கொடுத்த சம்பளம் என்ன தெரியுமா? ஒரு போட்டிக்கு இத்தனை லட்சங்களா? முழு பட்டியல் இதோ..
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை என ஐசிசி யின் அனைத்து கோப்புகளையும் வென்றது.
15 ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடிவரும் தோனி தனக்கான தனி அந்தஸ்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நிறுவனங்களின் பிரதான விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார் நடுத்தர குடும்பத்தில் இருந்துவந்த பிரதான விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தோனியின் சொத்து மதிப்பு ஒரு போட்டிக்கான சம்பளம் மற்றும் ஐபிஎல் வருமானம் என தனித்தனியாக அனைத்தையும் இந்த பதிவில் காண்போம்.
சர்வதேச போட்டிக்கான சம்பளம்:
2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்ற அதன் பிறகு தொடர்ந்து லிமிடெட் ஒரு போட்டிகளில் மட்டுமே நீங்க எனக்காக கடந்த உலக கோப்பை தொடர் வரை ஆடி வந்தார் இந்நிலையில் பிசிசிஐ ஒவ்வொரு வீரருக்கும் வழங்கிவரும் போட்டி வாரியான சம்பளங்களை இங்கே காண்போம். இங்கு குறிப்பிடப் பட்டவை அனைத்தும் ஒரு போட்டிக்கான சம்பளம் மட்டுமே.
டெஸ்ட் போட்டி -15 லட்சம்
ஒருநாள் போட்டி – 6 லட்சம்
டி20 போட்டி – 3 லட்சம்
தோனியின் வருடாந்திர வருமானம்:
2015 ஆம் ஆண்டு போர்ப்ஸ் நிறுவனம் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் தோனி 23வது இடம் பிடித்திருந்தார். அந்தப் பட்டியலில் இருந்த ஒரு இந்தியரும் இவரே. அப்போது இவரது வருடாந்திர வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அதன் பிறகு, இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் மெல்ல மெல்ல வருட வருமானம் குறைய தொடங்கியது. 2019ஆம் ஆண்டு இவரது வருடாந்திர வருமானம் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது இவரது வருமானத்தின் பெரும்பகுதி ஐபிஎல் மற்றும் இதர விளம்பரங்களில் இருந்து வருபவை மட்டுமே.
தோனியின் சொத்து மதிப்பு
ஆண்டுதோறும் பாலிவுட் நடிகர்களின் சொத்து மதிப்பை கணக்கிடும் இணையதளம் ஒன்று மற்ற பிரபலங்களின் சொத்து மதிப்பையும் அவ்வபோது கணக்கிட்டு வெளியிடும். 2019 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட கணக்கின்படி, தோனியின் சொத்து மதிப்பு சுமார் 700 முதல் 800 கோடி ஆகும். இந்திய விளையாட்டு வீரர்களில், தொனிக்கு முன் இடத்தில் இருப்பவர் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆவார்.
ஐபிஎல் வருமானம்:
2008 ஆம் ஆண்டு ஏலத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சென்னை அணிக்காக தோனி ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து சென்னை அணிக்காக ஒவ்வொரு சீசனும் தக்க வைக்கப்பட்டிருக்கிறார். இதற்காக சம்பளமாக ஒவ்வொரு சீசனுக்கும் 15 கோடி ரூபாயை சென்னை அணி தோனிக்கு வழங்குகிறது.