சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் யார் தேவை..? பக்கா பிளான் போட்டு கொடுத்த தல தோனி !!

2022 ஐபிஎல் தொடருக்காண ஏலத்தில் எந்தெந்த வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கலாம் என்பதற்காக சென்னை புறப்பட்டு வந்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

ஐபிஎல் தொடரில் வெற்றிகர அணியாக திகழும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் 4 முறை டைடல் பட்டத்தை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபமாக தோல்வியை தழுவியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான மவுசு குறைந்துவிட்டது என்று அனைவரும் கிண்டல் செய்தனர், ஆனால் அனைத்து விமர்சனங்களையும் உடை தெரியும்படி 2021 ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த கம் பேக் கொடுத்த சென்னை அணி கோப்பை வெற்றி பெற்றது.ஆனால் அதற்கு அடுத்த வருடமே அனைத்து அணியும் 4 வீரர்களை மட்டும் தக்கவைத்து விட்டு புதிதாக அணியை தேர்தெடுக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்தெடுத்து விட்டது.

இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் ஜடேஜா, தோனி, மொயின் அலி மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் போன்ற 4 வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொண்டது.

மேலும் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்காண மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுவதால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் மும்முரமாக யோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கையில் வைத்திருக்கும் 48 கோடி ரூபாய் தொகையை மனதில் வைத்துக் கொண்டு எந்தெந்த வீரர்களை அணியில் இணைக்கலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறது.

இதற்கான முக்கிய முடிவை எடுப்பதற்காக தனது சொந்த ஊரில் இருந்து சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார்.

ஏற்கனவே சென்னை அணியில் விளையாடிய வீரர்களையே சென்னை அணி மீட்டெடுக்குமா..? அல்லது புதிய வீரர்களை இணைத்து அணியை கட்டமைக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

 

Mohamed:

This website uses cookies.