மகேந்திர சிங் தோனி அதை நிச்சயமாக செய்ய வேண்டும் ரவீந்திர ஜடேஜா விருப்பம்
ரவீந்திர ஜடேஜா இந்தியாவின் தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரர். இந்தியாவுக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவர் மிக சிறப்பாக விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங் மற்றும் பில்டிங் என இரண்டிலும் மிக அற்புதமாக தன்னுடைய முழுப் பங்களிப்பை அளிக்கும் ஒரு சிறந்த வீரர்.
குறிப்பாக ஜடேஜா அரை சதம் அல்லது சதம் அடித்தால் தனது பேட்டை வாழ் போல சுழற்றுவார் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். தற்போது தனது செய்கையை மகேந்திர சிங் தோனியும் செய்ய வேண்டும் என்று ரவீந்திர ஜடேஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஜடேஜா
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டு. அதன் காரணமாக அந்தத் தொடரிலிருந்து அவர் மருத்துவக் குழு அவரை சிறிது காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியது. அதன் காரணமாக சிறிது காலம் சிகிச்சை எடுத்து ஓய்வில் இருந்தார்.அதன் காரணமாக அவரால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடதக்கது.
எனினும் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் சில மாதங்கள் கழித்து மீண்டும் விளையாடினார். நடந்த 7 போட்டிகளிலும் மிக சிறப்பாகவே ரவீந்திர ஜடேஜா செயல்பட்டார். பேட்டிங்கில் 131 ரன்கள் குவித்தார்.இவரது பேட்டங் ஸ்ட்ரைக் ரேட் 161 என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மிக சிறப்பாக பவுலிங் செய்து 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவரது பவுலிங் எகானமி 6.70 என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் தோனி அதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரவீந்திர ஜடேஜா தற்போது அதிக அளவில் சமூக வலைதளங்களில் உலா வருகிறார். சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சமூகவலைதளத்தில் ரவீந்திர ஜடேஜா செய்யும் வாழ் சுழற்சியை மகேந்திர சிங் தோனி தனது கையினால் செய்வதுபோல் உள்ள வீடியோவை பதிவிட்டது. அந்த வீடியோவை பார்த்த ரவிந்திர ஜடேஜா பதிலுக்கு மகேந்திர சிங் தோனி நிச்சயமாக இந்த செய்கையை பேட் மூலம் ஒரு போட்டியில் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
ரவீந்திர ஜடேஜா தற்பொழுது நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்று இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.