கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த அணி அறிவிப்பு; தோனிக்கு புதிய கவுரவம்
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்குச் சிறந்த கேப்டனாக தோனியைத் இஎஸ்பிஎன் கிரிக்இன்போ தளம் தேர்வு செய்துள்ளது.
மாறாக டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளது கிரிக்இன்போ தளம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 3 இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நிலையாக தோனியும், கோலியும் இடம் பெற்றுள்ளன நிலையில், ரோஹித் சர்மா ஒருநாள் அணியிலும், டி20 போட்டியில் பும்ராவும் இடம் பெற்றுள்ளனர்.
இஎஸ்பின் கிரிக்இன்போ குழுவில் மொத்தம் 23 பேர் கொண்ட குழு இந்த அணியைத் தேர்வு செய்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்யும்போது வீரர்கள் குறைந்தபட்சம் 50 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 6 ஆண்டுகள் விளையாடி இருக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் 75ஒருநாள் போட்டிகளிலும், டி20க்கு தேர்வு செய்யும் போது 100 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கான வீரர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் அணிக்கு கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவும், ஒன்டவுனில் விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
சிறந்த ஒருநாள் அணி;
ரோஹித் சர்மா, ஹசீம் ஆம்லா, விராட் கோஹ்லி, ஏ.பி டிவில்லியர்ஸ், ராஸ் டெய்லர், தோனி, ஷாகிப் அல் ஹசன், மிட்செல் ஸ்டார்க், லசீத் மலிங்கா, டிரண்ட் பவுல்ட், இம்ரான் தாஹிர்.