இராணுவ உடையில் தோனி காஷ்மீருக்கு சென்றதற்கு எதற்க்காக தெரியுமா? வெளியான எக்ஸ்ளுசிவ் தகவல்

ஜம்மு காஷ்மீரில், கிரிக்கெட் அகாடமி தொடங்க மகேந்திர சிங் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கேப்டனான தோனி, ராணுவத் தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

He is currently posted in Kashmir with the 106 TA Battalion (Para) of the Indian Army

ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொட ருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 15 ஆம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க தோனி திட்டமிட்டுள்ளார். அங்குள்ள இளைஞர்களை ஊக்கு விக்க இந்த அகாடமியை தொடங்க இருப்பதாகவும் அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர் பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துடன் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.