நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியது ஏன்..? ரகசியத்தை உடைத்தார் தோனி !!

நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியது ஏன்..? ரகசியத்தை உடைத்தார் தோனி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து வெளியேறும்போது நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கியது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. தோனி ஓய்வு பெறப்போகிறாரா? பந்தை ஏன் வாங்கினார்? ஆகிய கேள்விகளுக்கு தற்போது தோனியே விளக்கமளிக்கத்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறும்போது, நடுவரிடம் இருந்து தோனி பந்தை வாங்கினார்.

தோனியின் இந்த செயல், தோனி ஓய்வு பெறப்போகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியது. தோனி ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பான செய்திகளும் வைரலாகின. 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி முடிந்து வெளியேறும்போது தோனி, ஸ்டம்பை எடுத்து கொண்டு சென்றார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார்.

அதேபோல், சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதன் முன்னோட்டமாக, தோனி பந்தை வாங்கிய செயலை ரசிகர்கள் அனுமானித்தனர். அதனால் அந்த தகவல் வைரலாக பரவியது. தோனியின் இந்த செயலால் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் தோனி மந்தமாக விளையாடியது தொடர்பாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டிற்கு உள்ளாகவே இருப்பதால், உலக கோப்பை வரை தோனி ஆடுவது அவசியம் என்பதே முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் தோனியின் அனுபவ அறிவும் ஆலோசனையும் இந்திய அணிக்கு தேவை.

எனவே உலக கோப்பை வரை தோனி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியதால் தோனியின் ஓய்வு குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. தோனி நடுவரிடம் இருந்து பந்தை வாங்கியதற்கு காரணம் இதுவாக தான் இருக்கும் ரவி சாஸ்திரி உள்பட பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கருத்தை கூறியிருந்தாலும், இதுவரை மவுனம் காத்து வந்த தோனி தற்போது நடுவரிடம் இருந்து தான் பந்தை வாங்கியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

மும்பையில் சமீபத்தில் தோனி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தோனியின் பந்தை வாங்கியது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தோனி, “பந்தின் தன்மையையும், ஆடுகளத்தின் தன்மையையும் அறிந்து கொள்வதற்காகவே பந்தை நடுவரிடம் இருந்து வாங்கினேன். மேலும் எங்கள் பந்துவீச்சு பயிற்சியாளர் அருணிடம் அந்த பந்தை காணிபித்து அதன் தன்மையை அறிந்தகொள்வதே எனது நோக்கம், அதற்காகவே நடுவரிடம் இருந்து பந்தை வாங்கினேன்” என்றார்.

Mohamed:

This website uses cookies.